Sunday, May 24, 2009

சாவு, காயம், பசி

பாவம் யாழ் வாழ் அப்பாவிப் பொதுமக்கள்... சாவு, காயம், பசி என என்னென்ன துன்பங்களோ ?

அகதி முகாம்களில் போதுமான கழிவறைகள் போலும் இல்லை என இலங்கை அரசே ஒப்புகிறது ... தண்ணீர் , மருந்துகள் ..கேட்கவே வேண்டாம்

வானில் இருந்து பாத்தோம் ... அதிகமாய் யாரையும் காணோம் என்கின்றனர் போய் பார்த்த ஒன்று இரண்டு ஐ நா சபையினர்.... கிராமம் கிராமமாய் அழிக்கப்பட்டும் ஓடிப்போயும் சமூகங்கள் வேர் அறுக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்றல்ல இரண்டல்ல.... மூன்று லெட்சம் இந்திய வம்சாவளியினர் அகதி முகாம்களில்

இறைவா ஏன் இந்த அவலம் .... ?

100 அமேரிக்கர்களுக்கோ, 100 பிரிட்டானியர்களுக்கோ இதே கதி ஏற்பட்டால் அமேரிக்காவும் பிரிட்டனும் என்ன என்ன செய்யும் ? ஆனால் ...இந்தியர்கள் கதி ?

நான் புலிகளின் அபிமானி அல்ல... தீவிரவாதத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை...

ஒரு தனி மனிதன் என்ற விதத்தில் இதை இடுகிறேன்


மனவருத்தத்துடன்
விநாயக் (இணையப்பெயர்)

0 comments: