Saturday, May 23, 2009

மனித உறிமை சங்கங்கள் என்னவாயின ?

மனித உறிமை சங்கங்கள் என்னவாயின ?


யாழ்ப்பாணத்தில் செய்தி நிருவனங்களை ஒட்டுமொத்தமாய் முடக்கி விட்டது இலங்கை அரசு என்று எனது முந்தைய இடுகையில் எழுதி இருந்தேன்...... எந்த செய்தி நிருவனமும் உள்ளே அனுமதிக்கப் படவில்லை.... அப்பாவி மக்களின் சாவு எண்ணிக்கைகளை பரிசீலனை செய்ய யாருமில்லை ...அரசு தரப்பு மட்டுமே எஞ்சி இருக்குது ...

இப்போது போர் நின்றுவிட்டதாய் அறிவித்த ராஜபக்ஸே அரசு...இன்னமும் செய்தி நிருவனங்களையும் ஊடகங்களையும் (mediaவை) யாழ்பாணத்துக்குள் விடவில்லை......

சரி .... செய்தி நிருவனங்களைத்தான் விடவில்லை, போகட்டும், செஞ்சிலுவை சங்கத்தை ஏன் உள்ளே விடவில்லை என்றால், அது வா... விடுதலைப்புலிகள் கண்ணி வெடி வைத்து விட்டார்கள், அதனால் செஞ்சிலுவை சங்கத்தினர் செத்துப்போவார்கள் , அதனால் உள்ளே விடவில்லை என்கிறார்கள்...இலங்கை அரசு (காண்க இன்றைய இலங்கை வெளியுறவு அமைச்சரின் நேர்காணல்)
http://www.youtube.com/watch?v=3sz3JfWVN-4&eurl=http%3A%2F%2Fnews.google.com%2F&feature=player_embedded

நெல் வயல்களில் கண்ணி வெடி இருப்பதாய் அடுத்ததாய் ஒரு புருடாவும் கிளம்பியிருக்குது ......

ஐ நா சபையில் இருந்து வந்தவர்கள் (திரு நம்பியார்) யாழ்பாணத்தை ஹெலிக்காப்டரில் இருந்தே சுத்திப்பார்ததாய் அறிக்கைகள் வெளி வருகின்றன...

ஆகமொத்தம் சாகும் இந்திய வம்சாவளியை , பெண்டிரையும் குழந்தைகளையும், முதியோரையும் யாரும் நேரே போய் பார்த்ததாய் , இரண்டு வார்த்தை ஆறுதல் சொன்னதாய் தெரியவில்லை...செய்தியில்லை ...

அது சரி இந்திய மனித உறிமை சங்கங்கள் என்னவாயின ?

ஐயோ அப்பாவிப் இளம் மனைவியை அடிக்கின்றனரே என்றும், ஐயோ காஷ்மீரில் சாகிறார்களே என்றும் இந்தியாவில் மட்டும் ஓலமிடும் மனித உறிமை சங்கங்கள் எங்கே ?

மரத்தை வெட்டினால் மரத்தை சுற்றி கட்டிப்பிடுத்துக்கொள்கிறார்கள் .... சாகும் யாழ் மக்கள் ?

காஷ்மீரிகளும் நம் சகோதரரே...எம் தாயும் தமக்கையும் பெண்டிரே...ஆனால் இந்திய வம்சாவளி100 மைல் தூரத்தில் 1000க்கணாக்கில் சாவது இந்த மனித உறிமை சங்கங்கள் கண்களில் படவில்லையா என்ன ?

இன்னும் எத்தனை காலம் அப்பாவி மக்கள் செத்த பின், யாழின் உண்மைகள் வெளிவரும் ?

பிரான்ஸும், மேலை நாடுகளும் முட்டிக்கொள்ளும் அளவு கூட நம் தமிழ் தொலைக்கா(க?)ட்சிகளில் செய்தியில்லையே ... சாகிறவன் சாகட்டும் என்று, சீரியல் ஓடுகின்றன....

என்ன சொல்ல ?

நான் புலிகள் அபிமானியல்ல.....எனக்கு இந்த பிரெச்சனையில் ஈடுபாடில்லை... ஆனால் பொது மக்கள் அவலத்தைக் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ..



வேதனையுடன்
சுப்பு / விநாயக் (வலைப்பெயர்)

Tags : LTTE, Loss of human lifes, Red Cross , புலிகள், ஈழம், ஈழ மக்கள் , ஊடகங்கள்

0 comments: